இன்று பதவி ஏற்கும் 17 கர்நாடக அமைச்சர்கள் பெயரை அறிவித்த எடியூரப்பா

பெங்களூரு

இன்று காலை 10.30 மணிக்கு பதவி ஏற்க உள்ள கர்நாடக அமைச்சர்கள் பெயரை முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி அரசு கவிழ்ந்த பிறகு அம்மாநில முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றார். இது நிகழ்ந்து மூன்று வாரங்கள் ஆகியும் அமைச்சரவையில் இடம் பெற உள்ள உறுப்பினர்கள் குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்தது கடந்த 17 ஆம் தேதி அன்று எடியூரப்பா பாஜக தலைவர் அமித் ஷாவுடன் இது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். அந்த ஆலோசனையின் அடிப்படையில் 17 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலை எடியூரப்பா வெளியிட்டுள்ளார்.

அமைச்சர்கள் விவரம் வருமாறு.

1. கோவிந்த் மகதப்பா கரஜோய்
2. ஆஷ்வத் நாராய்ண்
3. லட்சுமண் சங்கப்பா சாவடி
4. கே எஸ் ஈஸ்வரப்பா
5. அசோகா
6. ஜகதீஷ் ஷெட்டர்
7. ஸ்ரீராமுலு
8. சுரேஷ் குமார்
9. சோமண்ணா
10. சி டி ரவி
11. பசவராஜ் பொம்மை
12. கோடா ஸ்ரீனிவாஸ் பூஜாரி
13. ஜே சி மது சுவாமி
14. சந்திரகாந்த கவுடா சன்னப்ப கவுடா பாடில்
15. எச் நாகேஷ்
16. பிரபு சவுகான்
17. ஜோல் சசிகலா அன்னா சாகேப்

இவர்கள் இன்று காலை 10.30 மணிக்குப் பதவி ஏற்க உள்ளனர்.