பெங்களூரு: அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் தமது அலுவலகத்தில் கடந்த வாரங்களாக நாட்களாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தார்.
இந் நிலையில், எடியூரப்பாவின் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு தற்போது கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  முதலமைச்சரின் குடியிருப்பான காவிரி மற்றும் தவளகிரி குடியிருப்புகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 5 நாட்களுக்கு வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் எடியூரப்பா. இது குறித்து முதலமைச்சரின் அரசியல் செயலாளர் கூறி இருப்பதாவது:
முதலமைச்சரின் மாற்று ஓட்டுநர், பாதுகாவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் முதலமைச்சரின் கிருஷ்ணா அலுவலகத்தில் பணியாற்றுகின்றனர். முதலமைச்சர் உள்பட அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றார்.