ராகுல் காந்தியுடன் கர்னாடகா காங்கிரஸ் தலைவர்கள் ஜனவரி 13ல் சந்திப்பு

டில்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்னாடகா காங்கிரஸ் தலைவர்களை வரும் 13ஆம் தேதி சந்திக்க உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச தேர்தல்களில் பாஜக பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.  தற்போது கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.    இந்த தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்காக அக்கட்சி திட்டமிட உள்ளது.  அதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்னாடகா காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பு வரும் 13ஆம் தேதி நடக்கும் என தெரிய வந்துள்ளது.    சந்திப்பில் கலந்துக் கொள்ள கர்னாடகா மாநில முதல்வர் சித்தராமியா,  மாநிலத் தலைவர் பரமேஸ்வர், கட்சியின் பிரசாரக்குழு தலைவர் சிவகுமார் ஆகியோரை ஜனவரி 13ஆம் தேதி அன்று டில்லிக்கு வருமாறு ராகுல் காந்தி அழைத்துள்ளார்.

இந்த சந்திப்பில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு பற்றி விவாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.   மேலும் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் இந்த சந்திப்பு நிகழ்வது பலருக்கும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.