கர்நாடகா : விவசாயக்கடன் தள்ளுபடி மசோதாவுக்கு கூட்டமைப்பு ஒப்புதல்

பெங்களூரு

ர்நாடக அரசின் ரூ. 1.25 கோடி மதிப்பிலான பாசன திட்டங்கள் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி மசோதாவுக்கு காங்கிரஸ் – மஜத கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.   இந்த கூட்டணி அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க இரு கட்சிகளின் உறுப்பினர்கள் கொண்ட கூட்டமப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.   இந்த அமைப்பின் இரண்டாவது கூட்டம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.   கூட்டத்தில் அரசு நலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வரா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் மற்றும் மஜத செயலாளர் அலி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.   விவாதத்தின் முடிவில் அரசின் பல நலத் திட்டங்களுக்கு அமைப்பு ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்த நலத் திட்டங்கள் குறித்து நடைபெற உள்ள நிதி நிலை அறிக்கைத் தொடரில் முதல்வர் குமாரசாமி அறிவிக்க உள்ளார்.    இதில் கர்நாடக மாநில நீர்பாசன திட்டங்கள் ரூ.1.25 மதிப்பில் நிறைவேற்றப்பட உள்ளது.  அத்துடன் விவசாயக் கடன் தள்ளுபடி மசோதாவும் சட்டப்பேரவையில் அளிக்கப்பட உள்ளது.   வீடு இல்லாத ஏழைகளுக்கு 20 லட்சம் வீடுகள் கட்டித் தரும் திட்டமும் உள்ளது.

மேற்கூறிய தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்த மஜத செயலர் அலி இது குறித்து விவரங்கள் அறிய இன்னும் சில தினங்கள் காத்திருக்க வேண்டும் எனவும் நிதிநிலை அறிக்கைத் தொடரில் முழு விவங்களையும் முதல்வர் அளிப்பார்  எனவும் கூறி உள்ளார்.