2023சட்டசபை தேர்தலுக்காக இன்றே பாதயாத்திரையை தொடங்கினார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 2023ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவகுமார், மாநிலம் முழுவதும பாதயாத்திரை சென்று மக்களை நேரில் சந்திக்கிறார்.  அதன்படி, இன்று டி.கே.சிவகுமார் கட்சித்தொண்டர்களுடன் பாதயாத்திரையை தொடங்கி உள்ளார்.

ஜனா த்வானி (Jana Dhwani’)  என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும் வகையிலும், மாநில மற்றும் மையத்தில் பாஜக அரசின் மக்கள் பிரச்சினைகள் மற்றும் தோல்விகளை எடுத்துக்காட்டுவதற்காக  பாத யாத்திரை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள  மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், குறைந்தபட்சம்  100 சட்டமன்ற தொகுதிகளில் பாதயாத்திரை  செல்ல திட்டமிட்டு உள்ளதாக கூறியுள்ளார்.