கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த்சிங் கடத்தல்: சித்தராமையா புகார்

பெங்களூரு:

நாளை சட்டமன்றத்தில்  எடியூரப்பா  பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிலையில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா பரபரப்பு புகார் கூறி உள்ளார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலிவ் விஜயநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த்சிங் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் உறுதி செய்துள்ளார். குதிரை பேரத்தில் ஈடுபடுவோர் அவரை கடத்தியிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

மேலும், காங்கிரஸ்சட்டமன்ற உறுப்பினர்களிடம் கர்நாடக பாரதிய ஜனதா தலைவர்கள் பேசியதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறிய  சித்தராமையா, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாரதியஜனதா கட்சியை சேர்ந்த  ஜனார்த்தனரெட்டி, எடியூரப்பா, ஸ்ரீராமுலு ஆகியோர் பேசியதற்கான ஆடியோ ஆதாரம் உள்ளதாகவும், அதில்   அவர்கள் எப்படி குதிரைபேரத்தில் ஈடுபட்டார்கள் என்பதெல்லாம் உள்ளதாகவும் கூறி பாரதிய ஜனதாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.