கர்நாடகா : சாலை விபத்தில் காங்கிரஸ் எம் எல் ஏ மரணம்

துளசிகேரி, கர்நாடகா

ற்போது நடந்த கர்நாடகா தேர்தலில் ஜாம்கந்தி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சித்து நியமகௌடா சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

நடந்து முடிந்த கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தலில் சித்தப்பா பீமப்பா நியமகௌடா ஜாம்கந்தி தொகுதியில் போட்டி இட்டார்.  இவரை சுருக்கமாக சித்து நியமகௌடா என குறிப்பிடுவது வழக்கம்.   இவர் நரசிம்ம ராவின் மத்திய அரசில் அமைச்சராக பணி ஆற்றியவர் ஆவார்.   இந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை சுமார் 2500 வாக்குகள் வித்தியாசத்தில் சித்து தோற்கடித்தார்.

சித்து கோவா விமானநிலையத்தில் இருந்து தனது சொந்த ஊவான பகல்கோட்டுக்கு காரில் வந்துக் கொண்டிருந்தார்.   இன்று விடியற்காலை சுமார் 4.30 மணிக்கு அவர் வந்துக் கொண்டிருந்த கார் துளசிகேரி அருகே விபத்துக்குள்ளாகியது.  இதில் அவர் மரணம் அடைந்துள்ளார்.

மரணம் அடைந்த சித்து கடந்த 1950 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி  பிறந்தவர்.   67 வயதான இவரின் மரணத்துக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.