பெங்களூரு

ர்நாடக காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் மாநிலம் எங்கும் பயணம் செய்து கொரோனாவால் மக்கள் படும் துயரைக் கேட்டறிய உள்ளார்.

கொரோனா தொற்றால் கர்நாடகாவில் இன்று 149 பேருக்குத் தொற்று உறுதியாகி இதுவரை 1395 பேர் பாதிக்கப்பட்டு 40 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதில் 543 பேர் குணமாகி உள்ளனர்.   கர்நாடக மாநிலத்தில் இதையொட்டி நான்காம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் கட்சி எப்போதுமே மக்களின் குறிப்பாக நலிவடைந்த மக்களின் துயரை துடைக்கப் பாடுபட்டு வருகிறது  தற்போது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்கள் பெருமளவில் துயருற்று வருகின்றனர்.  அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக குரல் எழுப்பவும் குரலின்றி தவித்து வருகின்றனர்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் என்னும் முறையில் சாதாரண பொது மக்களுக்குச் சேவை செய்வது எனது கடமையாக உள்ளது.  எனவே இந்த சமயத்தில் துயருறும் மக்களுக்கு எனது முழு சக்தியையும் பயன்படுத்தி உதவ விரும்புகிறேன்.  அவர்களின் துயர் குறித்துக் கேட்டறிந்து அதற்கான உதவிகள் செய்ய விரும்புகிறேன்.  எனவே ஊரடங்கு முடிவடைந்த பிறகு  பயணம் செய்ய அனுமதி அளிககபட்ட பிறகு மாநிலம் முழுவதும் பயணம் செய்ய உள்ளேன்

அப்போது இந்த காலகட்டத்தில் துயருற்ற மக்களின் துயரங்கள் குறித்துக் கேட்டறிந்து அதற்கான உதவிகளைச் செய்ய ஆலோசனை நடத்த உள்ளேன்.   இதன் மூலம் இந்த ஊரடங்கின் போது துயருற்ற எனது சகோதர சகோதரிகளுக்கு ஆறுதலும் தேவைப்படும் உதவிகளையும் அளிக்க உத்தேசித்துள்ளேன்.   இதைக் கட்சி சார்பாக இல்லாமல் அனைத்து மக்களுக்காகவும் செய்ய உள்ளேன்.    இதை அரசியல் ஆக்க வேண்டாம் என எனது கட்சிக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.