கர்நாடகாவில் ஆரோக்கியமான வீடு என்ற சுகாதார பயணம்: காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு

பெங்களூரு: ஆரோக்கியமான வீடு என்ற சுகாதார பயணத்தை கர்நாடக காங்கிரஸ் கமிட்டி மேற்கொள்கிறது.

அதற்காக காங்கிரஸை சேர்ந்த 15000 பேர் கொண்ட கொரோனா எதிர்ப்பு படை  புறப்படுகிறது. 8000 பஞ்சாயத்துகள்,  வார்டுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் வீடு, வீடாக செல்ல உள்ளனர்.

CTP கிட், தெர்மல் ஸ்கேனர் , பல்ஸி ஆக்ஸிமீட்டர், சானிடைசர் உள்ளிட்ட மருத்துவ சாதனங்களோடு மக்களை பரிசோதித்து, பிரச்சனைகள் கண்டறியப்பட்டால் உடனே மேல் நடவடிக்கை எடுக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,முக்கிய பணிகளாக கொண்டு இந்த காங்கிரஸ் மருத்துவ பிரச்சார இயக்கம் செயல்படும்.

கார்ட்டூன் கேலரி