கர்நாடகாவில் ஓரே நாளில் 7,571 பேருக்கு கொரோனா தொற்று: 93 பேர் பலி

பெங்களூரு: கர்நாடகாவில் ஓரே நாளில் 7,571 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக, 93 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகாவில் 2 வாரங்களாக முன் எப்போதும் இல்லாத கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இந் நிலையில் 24 மணி நேரத்தில் 7,571 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த பாதிப்பு 2,64,546 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒருநாளில் 6,561 பேர் மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். ஒட்டு மொத்தமாக இதுவரை 1,76,942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருந்தாலும், இன்று ஒரே நாளில் 93 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 4,522 ஆக உயர்ந்துள்ளது.