கர்நாடகாவில் இன்று 8,793 பேருக்கு கொரோனா தொற்று..!

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று 8,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த மாதத்தில் இருந்து கொரோனா தொற்று, தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந் நிலையில், இன்று மேலும் 8,793 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மாநிலத்தின் ஒட்டு மொத்த பாதிப்பு 6,20,630 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 125 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 9,119 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று 7,094 பேர் குணமாக ஒட்டுமொத்தமாக  குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,99,506 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் 1,11,986 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.