கர்நாடக துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா…

பெங்களூரு: கர்நாடக  துணைமுதல்வர் அஸ்வத் நாராயணுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் வரும் 21ந்தேதி மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. முன்னதாக, சட்டசமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைவரும் தொற்று சோதனை நடத்த சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சோதனை நடத்தப்பட்து.
இதில், துணைமுதல்வர் அஷ்வத் நாராயனுக்க கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை அவரும் உறுதி செய்து டிவிட் பதிவிட்டுள்ளார்.
அதில்,  மாநல  சட்டசபை கூட்டத்தொடர் வரவுள்ள நிலையில், கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதன் முடிவு வெளிவந்துள்ளது.  அதில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  எனக்கு அறிகுறிகள் எதுவுமில்லை.
நான் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொள்வேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளும்படி வேண்டி கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.