பெங்களூரு

ர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் அமைய உள்ள அமைச்சரவை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக மாநில முதல்வராக நாளை குமாரசாமி பதவி ஏற்க உள்ளார்.   அமைச்சரவை அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருடன் குமாரசாமி நேற்று ஆலோசனை செய்துள்ளார்.   இந்நிலையில் அவருடைய அமைச்சரவை குறித்தும் சபாநாயகர் குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மஜத தலைவர் குமாரசாமி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.   சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸை சேர்ந்த கே ஆர் ரமேஷ்குமார் பதவி ஏற்க உள்ளார்.  அத்துடன் காங்கிரஸுக்கு 22 அமைச்சர்களும் மஜத கட்சிக்கு 12 அமைச்சர்களும் இருப்பார்கள்.   சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு பெற்ற பின் முதல்வர் தவிர அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள்.

இந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் செயலர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

துணை முதல் அமைச்சராக காங்கிரஸை சேர்ந்த ஜி பரமேஸ்வரா பதவி ஏற்க உள்ளார்.   நாளை இவரும் பங்கேற்பார் என கூறப்படுகிறது.   கர்நாடக மாநில சபாநாயகர் மற்றும் துணை முதல்வர் பற்றிய அறிவிப்பை இன்று ராகுல் காந்தி வெளியிட உள்ளார்.