கர்நாடகா தேர்தல்: போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. டெபாசிட் காலி

பெங்களூரு:

ர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு அதிமுக போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது.

பரபரப்பான காவிரி பிரச்சினை நடைபெற்று வந்த நிலையில், க கர்நாடக சட்டமன்ற  தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 3 தொகுதிகளில் வேட்பாளர் நிறுத்தப்பட்டனர்.

பெங்களூர் காந்திநகர் தொகுதியில் யுவராஜ் என்பவரும், கோலார் தங்கவயல் தொகுதியில் எம்.அன்பு மற்றும் ஹானூர் தொகுதியில் ஆர்.பி.விஷ்ணு குமார், ஆகியோர்  நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஆனல்,  இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் இந்த 3 தொகுதியிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் படு தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

கோலார் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்புக்கு வெறும் 127 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.