பெங்களூரு:

ர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, முன்னாள் பிரதமர் தேவகவுடா போன்ற தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து அரசியல் பிரபலங்கள், சாமியார்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

பிரபல கிரிக்கெட்  முன்னாள் வீரர் அனில் கும்பளே தனது குடும்பத்தினருடன் சென்று வாக்குகளை பதிவு செய்தார்.

அதுபோல மைசூரில் உள்ள மைசூர் அரச குடும்பத்தின் வாரிசு எடுவீர் கிருஷ்ணதத்தா வாடியார் குடும்பத்தினர் தங்களது வாக்குக பதிவு செய்தனர்.

மைசூர் மகாராஜா குடும்பத்தினர்

மேலும், பிரபல சாமியாரான ஸ்ரீஸ்ரீரவி சங்கர் கனகபுரா வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஸ்ரீஸ்ரீரவி சங்கர்

அதுபோல மூறுசாவிர் மடத்தின் சாமியார் குருசித்தா ராஜயோகேந்திர ஸ்வாமி தனது வாக்கை ஹூப்ளி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பதிந்தார்.

குருசித்தா ராஜயோகேந்திர ஸ்வாமி

கர்நாடக மாநிலஅமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தனது குடும்பத்தினருடன் வந்து சர்வாங்க நகர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். இவர் இந்த தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலஅமைச்சர் கே.ஜே.ஜார்ஜ்

மேலும் திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ஆன்மிக தலைவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.