பெங்களூரு

ர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை மின்கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் மே மாதம் 12ஆம் தேதி கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   அதிமுக சார்பில் பெங்களூரு மாவட்டத்தில் காந்திநகர்,  சாம்ராஜ்நகர்  மாவட்டத்தில் ஹானூர்,  மற்றும் கோலார் மாவட்டத்தில் தங்க வயல் ஆகிய மூன்று தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப் பட்டுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரி அதிமுக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

தேதல் ஆணையம், ”தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மூன்று தினங்களுக்குள் கட்சிச் சின்னத்தை கோரி விண்ணப்பம் அளிக்க வேண்டும்.   ஆனால் அதிமுக தமாதமாக இரட்டை இலை சின்னத்தை  கோரி உள்ளது.  அதனால் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது” என அறிவித்தது.

தற்போது அதிமுகவுக்கு தேர்தல் அணையம் இரட்டை மின்கம்பம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.