பெங்களூரு:

டைபெற்று முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 104 இடங்களை கைப்பறி பாஜ தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. ஆனால், ஆட்சியை அமைக்க தேவையான 112 இடங்கள் கிடைக்காததால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்  காங்கிரஸ்-மஜத கூட்டணி பிடிக்காத எம்எல்ஏக்கள்  பலர் தங்களுடன் பேசி வருவதாக பாஜக நிர்வாகி ஈஸ்வரப்பாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதன் காரணமாக கர்நாடகாவில் குதிரை பேரம் தொடங்கி உள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

இந்நிலையில் பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாநில பாஜ தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இதில் சட்டசபை கட்சி தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக பா.ஜ. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கூறி உள்ளார்.

ர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 12ந்தேதி நடைபெற்று முடிந்தது. 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குகளின் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜ. 104 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை. இந்நிலையில், மாநில கவர்னர்  வஜூபாய் வாலாவை சந்தித்து எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அவருக்கு மெஜாரிட்டி நிரூபிக்க 7 நாட்கள் கெடு வித்திருப்பதாக கூறப்படுகறிது.

இந்நிலையில், இன்று பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்நடக்கிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா,  இன்று  நான் சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளேன். அதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்களுடன் சென்று  கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு வலியுறுத்துவேன் என்றார்.

மேலும்,  இனி கவர்னரின் முடிவுபடியே செயல்படுவோம். நிச்சயம் முதல்வராக பொறுப்பு ஏற்பேன் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், மதசார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் ஆதரவு இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க  அழைப்பு விடுக்க வேண்டுமென கவர்னரை சந்தித்து  கோரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடக தேர்தலில் 37 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ள ஜேடிஎஸ், காங்கிரசின் 78 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சி மற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் உள்பட 116 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக  கவர்னரிடம்  கடிதம் கொடுத்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பெங்களூரு வந்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர், பா.ஜ.க. ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்று இரவு டில்லியில் பாஜ ஆட்சிமன்ற கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். அப்போது கர்நாடக தேர்தல் குறித்தும், ஆட்சி அமைப்பது குறித்தும் ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பா,  காங்கிரஸ்-மஜத கூட்டணி பிடிக்காத எம்எல்ஏக்கள்  பலர் தங்களுடன் பேசி வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இதன் காரணமாக குதிரை பேரத்தில் பாஜக ஈடுபட்டு வருவது வெட்டவெளிச்சமாகி உள்ளது.