பெங்களூரு:

கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 12ம் ந்தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் சித்தராமையா மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் அவர் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பாதாமி தொகுதியிலும் போட்டியிடவுள்ளார். 23-ம் தேதி இந்த தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்யப் போவதாக இன்று அறிவித்துள்ளார்.