பெங்களூரு

ரும் மே 12ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 2655 பேர் களத்தில் உள்ளனர்.

தேர்தல் ஆணையம் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதம் 12ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவித்துள்ளது.  அதை ஒட்டி அனைத்துக் கட்சிகளின் சார்பில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.    வேட்பு மனு திரும்பப் பெறுவதும் வேட்பு மனு சரிபார்க்கும் நடவடிக்கையும் முடிவு பெற்றுள்ளது.

தற்போது தேர்தல் ஆணையம் இந்த தேர்தல் களத்தில் மொத்தம் 2655 வேட்பாளர்கள் உள்ளதாக அறிவித்துள்ளது.  இதில் 2436 ஆண்களும் 219 பெண்களும் போட்டி இடுகின்றார். பாஜகவின் 234 மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.   ஆனால் மொத்தமுள்ள 234 தொகுதிகளில்  இரு தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் சித்தராமையாவும் எடியூரப்பாவும் தலா இரு தொகுதிகளில் போட்டி இடுகின்றனர்.    இது தவிர மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் 201 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக்கட்சி பகுஜன் சமாஜ் சார்பில் 22 இடங்களிலும் வேட்பாளர்கள் நிறுத்தப் பட்டுள்ளனர்.    மாநிலக் கட்சிகள் சார்பில் 800 பேரும் சுயேச்சையாக 1155 பேரும் களத்தில் உள்ளனர்.

முலபகிலு தொகுதியில் அதிக பட்ச வேட்பாளர்களாக 51 ஒஏர் உள்ளனர்.   இந்த தொகுதியில் அதிகமாக 17 பேர் வேட்பு மனு திரும்பப் பெற்றுள்ளனர்.  கடந்த 2013ஆம் ஆண்டு இதேதொகுதியில் 2948 பேர் போட்டி இட்டது நினைவிருக்கலாம்.

அதே போல செல்லக்கரே தொகுதியில் 4 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.