டில்லி

ர்நாடக பாஜக அமைச்சர் ஒருவரின் மகள் தான் காதலிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரை திருமணம் செய்துக் கொள்ள உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளார்.

கடந்த மாதம் உச்சநீதிமன்றம் வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்துக் கொள்ள யாரும் தடை விதிக்கக் கூடாது என உத்தரவிட்டது தெரிந்ததே.   ஒரு கேரள இந்துப் பெண் ஒரு இஸ்லாமியரை காதல் திருமணம் செய்த வழக்கில் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்தது.    இது நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.   அந்த வழக்கில் மதம் குறுக்கே வந்தது போல் தற்போது கட்சி குறுக்கே வந்துள்ள ஒரு காதல் கதை வழக்காகி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஒரு 26 வயது இளம்பெண் பொறியாளர் படிப்பு படித்தவர்.    அவர் பாஜக வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆவார்.    அந்தப் பெண்ணுக்கும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஒருவரை காதலித்துள்ளார்.   அவர்கள் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் ஒப்புக் கொள்ளவில்லை.   அந்தப் பெண்ணுக்கு சில வாரங்கள் முன்பு கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் கட்டாயத் திருமணம் செய்ய பெற்றோர் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் அந்தப் பெண் திருமணத்தில் இருந்து தப்பி டில்லிக்கு சென்று விட்டார்.  அங்கு அவர் பிரபல வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிந்துள்ளார்.   அந்த வழக்கு மனுவில் அவரும் அவர் காதலரும் அந்தப் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரரால் மிரட்டப் படுவதாக தெரிவித்துள்ளனர்.    மேலும் தங்களுக்கு மிரட்டல் இருப்பதால் தங்களைப் பற்றிய எந்த ஒரு விபரமும் வெளியே தெரிவிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுவரை உச்சநீதிமன்றம் இந்த காதலர்கள் பற்றிய விவரங்களை வெளியிடவில்லை.   தற்போது கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன.   அதனால் காங்கிரஸ் இந்த காதல் விவகாரத்தை தனது பிரச்சாரத்தில் எடுக்க வாய்ப்புள்ளதால்,  காதலர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.