பெங்களூரு

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குமாரசாமிக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.   அதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குமாரசாமி கர்னாடகா முதல்வராக 2006 முதல் 2007 வரை பணி புரிந்து வந்தார்.

அவர் பதவிக்காலத்தில் ஜாந்தகால் எண்டர்பிரைசஸ் என்னும் தனியாருக்கு சுரங்கம் அமைக்க சலுகைகள் அளித்திருந்தார்.

அந்த சுரங்கங்கள் மாநிலத்தின் வடபகுதியான பல்லாரியில் இரும்புத்தாது எடுக்க அமைக்கப்பட்டன.

அந்த அனுமதியில் சில முறைகேடுகள் உள்ளதாக கண்டறியப்பட்டது.

ஜாந்தகால் எண்டர்பிரைசஸ் அதிபர் வினோத் கோயல் 2015ஆம் வருடம் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை செய்ததை அடுத்து பத்ரையா குற்றப் பத்திரிகையில் இணைக்கப்பட்டார்.

பத்ரையாவின் மகன் மூலமாக ரூ. 10 லட்சத்துக்கான காசோலை கைமாறியதாக கண்டுபிடிக்கப்பட்டு பத்ரையா கைது செய்யப்பட்டார்.

பத்ரையா கைது செய்யப்பட்டதும் தனக்கு முன் ஜாமீன் தேவை என குமாரசாமி விண்ணப்பித்திருந்தார்.

அந்த மனு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.

இதனால் குமாரசாமி கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

குமாரசாமிக்கு வயது 57 ஆகிறது,

இவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் அமைச்சரவையில் முதலமைச்சராக பணி புரிந்து வந்தார்.