ஐஎம்ஏ நிறுவன நிதி மோசடி: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன்

பெங்களூரு: ஐஎம்ஏ நிறுவன நிதி மோசடி வழக்கில் கர்நாடகாவின் முன்னாள் அமைச்சா் ரோஷன் பெய்குக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் அளித்து உள்ளது.

ஐஎம்ஏ நிறுவன நிதி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சா் ரோஷன் பெய்க்கை நவம்பர் 22ம் தேதி சிபிஐ கைது செய்தது. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர் கைது செய்யப்பட்ட மறுநாளான நவம்பர் 23ம் தேதி பெங்களூரு, புலிகேசி நகரில் உள்ள ரோஷன் பெய்க் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வழக்கு தொடா்பான பல முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந் நிலையில் இவ்வழக்கில் ஜாமீன் கோரி ரோஷன் பெய்க் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் பெய்க்கிற்கு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.