கர்நாடகா : முன்னாள் அமைச்சர் மரணம்

விஜயபுரா, கர்நாடகா

ர்நாடக முன்னாள் அமைச்சர் விமலாபாய் தேஷ்முக் உடல்நல பாதிப்பால் நேற்று மரணம் அடைந்தார்.

கர்நாடக மாநிலத்தின்  மூத்த அரசியல்வாதிகளில் 70  வயதான விமலாபாய் தேஷ்முக் ஒருவர் ஆவார்.   இவர் கணவரான ஜே எஸ் தேஷ்முக் கும் மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஒரு அரசியல் தலைவர் ஆவார்.

கடந்த 1994 ஆம் ஆண்டு கர்நாடக தேர்தலில் ஜனதா தளம் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட விமலாபாய் தேஷ்முக் அப்போதைய கர்நாடக முதல்வர் நாட கௌடாவை தோற்கடித்துள்ளார்.     இவர் ஜே எச் பட்டேல் தலைமையிலான கர்நாடக அமைச்சரவையில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக பணி புரிந்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு தேர்தலில் இவர் தோல்வி அடைந்தார்.   தற்போது சுமார் 70 வயதாகும் இவர் சமீபகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.   நேற்று விஜயபுராவில் உள்ள அவர் இல்லத்தில் காலமானார்.   விமலாபாயின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளது.   அவரது மறைவுக்கு அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.