முகக்கவசம் அணியாமல் இருந்தால் விதிக்கப்படும் அபராதத் தொகை: குறைத்தது கர்நாடகா

--

பெங்களூரு: முகக்கவசம் அணியாமல் இருந்தால் விதிக்கப்படும் அபராதத் தொகையை கர்நாடகா குறைத்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி, முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து அந்தந்த மாநில அரசுகள் அபராதம் வசூலித்து வருகிறது.

கர்நாடகாவில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அதற்கு விதிக்கப்படும் அபராதம் அதிகபட்சமாக ரூ. 1,000 உயர்த்தப்பட்டது. நகரப் பகுதிகளில் அபாரதம் 1,000 ரூபாயாக இருந்தது.

இந்த தொகை தற்போது ரூ. 250 ஆகவும், ஊரகப் பகுதிகளில் ரூ. 500 என்று இருந்த அபாரதம் ரூ. 100 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் நேரத்தில் வருமானமின்றி பலர் தவிப்பதால் அபராதம் கட்ட முடியவில்லை என்று கூறப்பட்டதால் குறைக்கப்பட்டதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.