கர்நாடகாவில் நவம்பர் 17ந்தேதி கலை அறிவியல், பொறியியல் உள்பட அனைத்து கல்லூரிகளும் திறப்பு! கர்நாடக அரசு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ,நவம்பர் 17ந்தேதி கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக்  உள்பட அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படுவம் என  கர்நாடக அரசு அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. கடந்தா 7 மாதங்களாக மூடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து,  ஐந்தாம் கட்ட தளர்வுகளில் மத்தியஅரசு பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி,  அக்டோபர் 15ஆம் தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.  அதேசமயம் கொரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இதையடுத்து சில மாநிலங்களில் சமூக இடைவெளியுடன் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் பெற்றோர்கள் ஒப்புதலுடன் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில், நவம்பர் 17ந்தேதி முதல் அனைத்துக்கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கர்நாடக கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  நவம்பர் 17 முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும்  மீண்டும் திறக்கப்பட உள்ளன. அனைத்து பட்டம் மற்றும் பொறியியல் டிப்ளோமா வகுப்புகள் மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அறிவித்து உள்ளது. மேலும் மத்திய மாநில அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.