கர்நாடகா கவர்னர் அதிகார துஷ்பிரயோகம்…..ராம்ஜெத்மலானி

--

டில்லி:

கர்நாடகா கவர்னர் அதிகார துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என ராம்ஜெத்மலானி கூறினார்.

கர்நாடகாவில் இன்று காலை முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். கவர்னர் முடிவு குறித்து மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி கூறுகையில், ‘‘எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்த கவர்னரின் முடிவு முட்டாள் தனமானது.

ஊழல் செய்வதற்கு அழைப்பிதழ் அனுப்பிய வேலையை கவர்னர் செய்துவிட்டார். அதிகார துஷ்பிரயோகம் செய்த கவர்னரின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்’’ என்றார்.