எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்புக் கடிதம்

பெங்களூரு

ர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்புக் கடிதம் அனுப்பி உள்ளார்.

எடியூரப்பாவை கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தாக முதலில் செய்தி வெளியாகியது.   அதன் பிறகு அது அதிகார பூர்வமற்ற செய்தி என சொல்லப்பட்டது.  அதன் பிறகு அதே செய்தி கர்நாடக பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில் பதியப்பட்டது.  சில நேரத்துக்குப் பிறகு அந்த தகவல் நீக்கப்பட்டது.

இந்நிலையில் ஆளுநர் எடியூரப்பாவுக்கு எழுதிய கடிதம் வெளியாகி உள்ளது.  அதில், அன்புள்ள எடியுரப்பா,

கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக 16.05.2018 அன்று எழுதிய கடிதம் கிடைத்தது.  அத்துடன் நீங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரி அளித்த கடிதமும் கிடைத்தது.

நான் அந்தக் கடிதங்களின் அடிப்படையில் உங்களை ஆட்சி அமைத்து முதல்வராக பதவி ஏற்க அழைக்கிறேன்.  நீங்கள் பதவி ஏற்பு விழாவுக்கான தேதி, நேரம் மற்றும் இடம்குறித்து தெரிவிக்கவும்.

நீங்கள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி நம்பிக்கை உள்ளதென நிருபிக்க வேண்டும்.  இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு உங்கள் ஆட்சி அமைந்த 15 நாட்களுக்குள் நடைபெற வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.