பெங்களூரு
ர்நாடக மாநிலத்தில் பக்ரீத் தொழுகையை மசூதிகளில் நடத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

இஸ்லாமிய மக்களுக்கு முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் திருநாள் வரும் 1 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.   வழக்கமாக பக்ரீத் பண்டிகைகளில் இஸ்லாமியர்கள் அனைவரும் மசூதிக்குச் சென்று சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கமாகும்.   ஆனால் தற்போது நாடெங்கும் கொரோனா பரவுதல் அதிகமாக உள்ளதால் பல மாநிலங்கள் மசூதிகளில் பக்ரீத் தொழுகை நடத்தத் தடை விதித்துள்ளன.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது.   குறிப்பாக பெங்களூரு நகரம் பாதிப்பு குறைவாக இருந்தது.  ஆனால் இங்கும் பரவல் அதிகமானதால் கடந்த 14 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.   இதைக் கர்நாடகா மட்டுமின்றி மற்ற மாநில மக்களும் பாராட்டினார்கள்.   ஆனால் திடீரென கர்நாடக முதல்வர் ஊரடங்கை முழுமையாக ரத்து செய்தார்.
இது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது.  இந்நிலையில் பக்ரீத் அன்று கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்கள் மசூதிக்குச் சென்று தொழுகை நடத்திக் கொள்ள அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியை அதிகமாக்கி உள்ளது.   மசூதிகளில் அதிக பட்சமாக 50 பேர்கள் வரை அனுமதிக்கலாம் எனவும் சமூக இடைவெளியை அவசியம் பின்பற்ற வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.