தனிமைப்படுத்தலில் உள்ளோர் மணிக்கு ஒரு செல்ஃபி அனுப்பக் கர்நாடக அரசு உத்தரவு

--

பெங்களூரு

னிமைப்படுத்தலில் உள்ளவர்கள் மணிக்கு ஒரு செல்ஃபி அனுப்ப வேண்டும் எனக் கர்நாடக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.  இவர்களில் பலர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி வெளியில் சுற்றி வருகின்றனர்.  இதனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு வெளியில் சுற்றுவோரைக் கண்காணிக்க நாடெங்கும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவ்வகையில் கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தனிமைப்படுத்தப்பட்டோர் தங்கள் வீடுகளில் இருந்து மணிக்கு ஒருமுறை செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும். அல்லது ஜிபிஎஸ் மூலம் தாங்கள் இருக்குமிடத்தை மணிக்கு ஒருமுறை அனுப்பி வைக்க வேண்டும்.

தூங்கும் நேரமான இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை உள்ள நேரங்களில் அவசியம் மணிக்கு ஒரு முறை செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும்.  அவ்வாறு அனுப்பாதவர்களை அரசுக் குழு வீட்டுத் தனிமையில் இருந்து தனிமை வார்டுக்கு மாற்றி விடும்.

அது மட்டுமின்றி வீட்டு தனிமைப்படுத்தல் சோதனைக் குழ் எந்த நேரமும் வீட்டுக்கு வந்து புகைப்படம் எடுத்து அரசுக்கு அனுப்பி வைக்கும்.

தனிமைப்படுத்தப்பட்டோர் செல்ஃபி அனுப்பத் தேவையான செயலியை https://play.google.com/store/apps/details?id=com.bmc.qrtnwatch என்னும் இணைய  தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.