டில்லியில் இருந்து வந்த 70 பேரைத் தனிமைப்படுத்தாமல் திருப்பி அனுப்பிய கர்நாடக அரசு 

பெங்களூரு

டில்லியில் இருந்து கர்நாடகா வண்ட 70 பேர தனிமைப்படுத்தாமல் கர்நாடக அரசு திருப்பி அனுப்பி உள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அமல்படுத்தப் பட்ட ஊரடங்கு இருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள வேளையில் டில்லியில் இருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்குச் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களில் வருவோரை அரசின் தனிமை விடுதிகளில் தனிமைப்படுத்தி வைத்தல் கட்டாயமாகும்.

ஆனால் நேற்று டில்லியில் இருந்து பெங்களூரு வந்த 70 பயணிகளைக் கர்நாடக அரசு தனிமை விடுதியில் சேர்க்கவில்லை.

மாறாக அவர்களை டில்லிக்கு உடனடியாக திருப்பு அனுப்பி உள்ளது.

இதற்காக நேற்று இரவு 8.30 மணிக்குப் பெங்களூருவில் இருந்து டில்லி சென்ற ரயில் ஒரு பெட்டி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

அதில் அவர்களைக் கர்நாடக அரசு திருப்பி டில்லிக்கே அனுப்பி உள்ளது.