பெங்களூரு:

டியூரப்பா அரசு எந்த நேரத்திலும் கவிழும் அபாயம் உள்ளதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்துவிட்டு அரியணை ஏறிய குமாரசாமி தலைமை யிலான பாஜக அரசு, அமைச்சர்களுக்கு இலாகாக ஒதுக்கியதில்,  இன்றுவரை அதிருப்தி நிலவி வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜேடிஎஸ் தலைவரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான எச்.டி. குமாரசாமி, பி.எஸ். யெடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு “எந்த நேரத்திலும் சரிந்து போகக்கூடும்” என்று  தெரிவித்து உள்ளார்.

குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 17 காங்கிரஸ்-ஜே.டி (எஸ்) எம்.எல். ஏக்கள் கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசாங்கம் கடந்த ஜூலை மாதம் கவிழ்ந்தது. இந்த விவகாரத்தில், அரசுக்கு எதிராக செயல்பட்ட 17 காங்கிரஸ்-ஜே.டி (எஸ்) எம்.எல்.ஏ.க்களை  அப்போதைய சட்டமன்ற சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் காலியாக உள்ள 17 இடங்களை நிரப்ப இடைத்தேர்தல்கள் வரும் ஜனவரி பிப்ரவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த குமாரசாமி,  காங்கிரசுடனான கூட்டணியைத் தொடர தனது கட்சி இன்னும் திறந்த நிலையில் உள்ளது என்றும், கட்சியை வலுப்படுத்த  மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், தற்போதைய நிலையில் எடியூரப்பா அரசு எந்த நேரத்திலும் கவிழும் வாய்ப்பு உள்ளதாக கூறியவர்,  “நான் இந்த அரசியல் கணிப்பைச் சொல்வதால், நான் ஒரு ஜோதிடர் அல்ல என்று கூறியவர், இந்த அரசாங்கம் செல்லும் வழியைப் பார்த்தாலோ,  அதன் நடத்தையைத்  பார்த்தாலோ, இந்த அரசாங்கம் எந்த நேரத்திலும் சரிந்து விழக்கூடிய வாய்ப்பு உள்ளது … காத்திருந்து பார்ப்போம் , “என்று தெரிவித்தார்.