மைசூர்:

ர்நாடகா ஹசன் தொகுதியில் போட்டியிட தேவகவுடா குடும்பத்தினருக்குள்ளேயே போட்டி யிட்டு பிரபலமான நிலையில், அந்த மாவட்டத்தை  சேர்ந்த பாஜக தலைவர் யோகா ரமேஷ், முன்னாள் முதல்வர் சித்தராமையா முன்னிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், மத சார்பற்ற ஜனதாதளம் 8 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில்,  மான்டியா மாவட்டத்தில் உள்ள ஹசன் தொகுதியில் நடிகர் அம்பரீஷ் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். இந்த தொகுதியில்  போட்டியிட தேவகவுடா வின் இரு பேரன்கள்  முட்டி மோத, மாநில அமைச்சராக உள்ள ரேவண்ணாவின் மகன்  பிரஜ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதாவும் சுயேச்சையாக களத்தில் குதித்துள்ளார். அவருக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஹசன் மாவட்ட பாஜக தலைவர் யோகா ரமேஷ் , இன்று முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இது கர்நாடக மாநில பாஜகவினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

யோகா ரமேஷ், கர்நாடக மாநில  திகுச்சப்பா ரைத்தா சங்க தலைவராகவும் உள்ளார். ஏற்கனவே மாநில போக்கு வரத்து கழகத்திலும் வேலை பார்த்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது  ஆர்கால்குட் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.