பெங்களூரு:

2010ம் ஆண்டு தொடரப்பட்ட  கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த கர்நாடக உயர்நீதி மன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

குழந்தைகள் கடத்தல் வழக்கில் ஆஜராகாமல்  தலைமறைவாக உள்ள நிலையில், அவருக்கு  வழங்கப்பட்ட ஜாமீனை கர்நாடக உயர்நீதிமன்றம் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ரத்து செய்துள்ளார்.

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள சுவாம நித்தியானந்தாவை பிடிக்க  ‘புளு’ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஏற்கனவே வழங்கப்பட்ட ஜாமினும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் நித்தியின் மீதான காவல்துறையினரின் பிடி இறுதி உள்ளது. விரைவில் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நித்தியானந்தாவுக்கு பெங்களூர் அருகே பிடதியில்  ஆசிரமம் உள்ளது. மேலும் பல மாநிலங்கள் மற்றும் பல நாடுகளிலும் ஆசிரமங்கள் உள்ளது. சர்ச்சைக்குரிய வகையிலும், நக்கலாக பேசுவதிலும் கில்லாடியான நித்தி மீது ஏராளமான பாலியல் புகார்களும் உள்ளன.

ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு இளம்பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகார் தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் 2010ம் ஆண்டு ஜாமின் வழங்கியது.

இந்த நிலையில், நித்தியின் முன்னாள் சீடரான,லெனின் கருப்பன் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, நித்தியானந்தாவுக்கு  வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார்.