பெங்களூரு

ர்னாடகா உயர்நீதிமன்ற நீதிபதி தனக்கு பதவி உயர்வு கொடுக்காமல் இடமாறுதல் செய்தததால் விரக்தி அடைந்து ராஜினாமா செய்துள்ளார்.

கர்னாடாக உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணி புரிபவர் ஜயந்த் எம் படேல்.  இவர் குஜராத் மாநிலத்தில் 2004ஆம் வருடம் நடந்த கலவங்களை விசாரணை செய்யும் மூவர் கொண்ட விசேஷ குழுவில் இருந்தார்.  இவரது விசாரணையில் கீழ் இஷ்ராத் ஜஹான் மற்றும் மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு வந்தது.  அவர் இந்த வழக்கில் குஜராத் மாநில அரசுக்கு எதிராக சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

தற்போது கர்னாடக உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ள பட்டேல் தலைமை நீதிபதி ஆவார் என எதிர்பார்க்கப் பட்டு வந்தது.   ஆனால் திடீரென அவர் அலகாபாத் நீதிமன்றத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.   அவர் தலைமை நீதிபதி ஆவது அரசின் மேல் இடத்தில் உள்ள யாருக்கோ பிடிக்காததால் தான் இந்த இடமாற்றம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறி வருகின்றன.

இந்நிலையில் நேற்று படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  இது குறித்து அவர் தெரிவிக்கையில்,  “எனது கடமையை நான் ஒழுங்காகத் தான் செய்து வந்தேன்.  அப்படி இருக்க இந்த இட மாறுதல் ஏன் என எனக்கு தெரியவில்லை.  இந்த முடிவை எடுத்தவர்கள் தான் இதற்கான காரணத்தை கூற வேண்டும். நான் இது வரை நான் விசாரணை செய்த வழக்குகளை அந்த வழக்குகளாகத்தான் பார்த்தேன்.   அதில் சம்பந்தப்பட்டவர் யார் என பார்க்கவில்லை.

நான் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு என்னை மாற்றம் செய்தது பிடிக்காததால் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டேன். நேற்றுடன் எனது பதவியில் இருந்து விடுவிக்கப் பட்டேன்.  ஏற்கனவே இங்கு மதிப்புடன் வாழும் போது புதிய இடத்தில் பணி செய்ய வேண்டிய தேவை இல்லை.   நான் ஒழுங்காக கடமை ஆற்றியதற்கான பரிசோ அல்லது தண்டனையோ எதுவாயினும் அதை கடவுள் எனக்கு அளிக்கட்டும். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். “ என விரக்தியுடன் கூறி உள்ளார்.

குஜராத் இஷான் ஜஹான் வழக்கில் சி பி ஐ விசாரணைக்கு மாற்றியதால் இந்த இட மாறுதலா என பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு படேல், “ஒவ்வொரு நாளும் நீதிபதிகள் ஒவ்வொரு வழக்கில் தீர்ப்பு சொல்கிறோம்.  அதில் யார் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை பார்த்து எங்களால் முடிவெடுக்க முடியாது.  வழக்கு விசாரணையின் அடிப்படையிலேயே எங்கள் தீர்ப்பு அமையும்.  இதனால் எனது தீர்ப்புக்கும் இட மாற்றத்துக்கும் சம்மந்தம் இருப்பதாக தெரியவில்லை.  மேலும் இந்த முடிவை யார் எடுத்தார்களோ அவர்கள் தான் இதற்கு பதில் அளிக்க முடியும்” என கூறினார்.

கர்னாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் படேலை பெரிதும் புகழ்ந்துள்ளனர்.   அத்துடன் குஜராத் உயர்நீதி மன்ற வழக்கறிஜர்கள் சங்கம் படேலின் இடமாற்ற உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர முடிவு எடுத்துள்ளது.  பெயர் தெரிவிக்க விரும்பாத வழக்கறிஞர் ஒருவர், “படேல் நிச்சயமாக கர்னாடகா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எல்லா தகுதிகளும் உடையவர்.  அவரை இடமாற்றம் செய்தது அவர் உயர்பதவிக்கு வருவதை யாரோ விரும்பாததால்தான்” என தெரிவித்துள்ளார்.