பெங்களூரு

நித்யானந்தா மீது பெண்களை பலாத்காரம் செய்ததாக எழுந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாமியார் நித்யானந்தா மீது பாலியல் தாக்குதல், பலாத்காரம், மோசடி மற்றும் குற்றவியல் நடவடிக்கை ஆகிய புகார்கள் எழுப்பப்பட்டன.  கடந்த 2010 ஆம் வருடம் நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருபையா என்பவர் இது குறித்து சென்னை காவல்துறைக்கு புகார் அளித்தார்.   அதை ஒட்டி நித்யானந்தா மீது பல வழக்குகள் பதியப்பட்டன.

நித்யானந்தா இருமுறை கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருக்கிறார்.   இவர் மீதான புகார்கள் குறித்த வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.   அந்த உயர்நீதிமன்றத்தில் தனது மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என நித்யானந்தா சார்பில் மனு அளிக்கப்பட்டது.    மேலும் இந்த வழக்கில் நித்யானந்தா தரப்பில் இருந்து பலமுறை வாய்தா வாங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நித்யானந்தா அந்தப் பெண்களின் சம்மந்தத்துடன் உறவு கொண்டதாக வாதம் ஒன்று வைக்கப்பட்டது.   மேலும் பெண்களின் சம்மதத்துடன் இந்த உறவு நிகழ்ந்ததால் இது குற்ற நடவடிக்கை ஆகாது எனவும் அதனால் குற்றப்பத்திரிகை பதிவு செய்யாமல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை அளிக்கப்பட்டது.

அது குறித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண்கள் நித்யானந்தாவின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.   அதனால் இவருடைய கட்டுப்பாட்டின் காரணமாக சம்மதம் பெறப்பட்டிருக்கலாம்   அல்லது அவர்களை வற்புறித்தி சம்மதம் பெற்றிருக்கலாம்.  எனவே இது குறித்து விசாரிக்க உடனடியாக நித்யானந்தா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது