நடிகர் யஷ் பிறந்த நாளை முன்னிட்டு, கே.ஜி.எஃப் 2 படத்தின் டீஸரை வெளியிட்டது படக்குழு. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் யாஷ் உடன் நடித்துள்ளனர்.

கன்னடத் திரையுலகின் டீஸர்கள் செய்த அனைத்துச் சாதனைகளையும் ஒரே நாளில் முறியடித்தது கே.ஜி.எஃப் 2 டீஸர். இதுவரை 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து செல்கிறது.

இந்த டீஸரில் பெரிய துப்பாக்கி ஒன்றின் மூலம், ஜீப்புகளைச் சுடுவார் யஷ். குண்டுகள் காலியானவுடன், அந்தத் துப்பாக்கியின் சூட்டில் சிகரெட்டைப் பற்றவைப்பார் .

தற்போது அந்தக் காட்சியே கே.ஜி.எஃப் 2 படக்குழுவினருக்குப் பெரும் சிக்கலை உண்டாக்கியுள்ளது. யஷ் சிகரெட் பற்ற வைக்கும் காட்சிக்கு, கர்நாடக மாநிலத்தின் புகையிலை ஒழிப்புப் பிரிவும், சுகாதாரத் துறையும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

இந்தக் காட்சியில் சிகரெட் புகைப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை. இது சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விளம்பரத்துக்குத் தடை விதிக்கும் சட்டத்தின் 5-வது பிரிவை மீறிய செயல் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.