கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா உறுதி

பெங்களூரு

ர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  ஆயினும் அம்மாநில முதல்வர் ஊரடங்கை ரத்து செய்துள்ளார். தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் ஊரடங்கு அமலில் உள்ளது.

இங்கு சுமார் 1.73 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதில் சுமார் 3100 பேர் உயிர் இழந்துள்ளனர்.  அகில இந்திய அளவில் கர்நாடகா மாநிலம் கொரோனா பாதிப்பில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதி ஆனதாகச் செய்திகள் வந்துள்ளன.

சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் கடவுள் தான் நம்மைக் காக்க வேண்டும் என ஸ்ரீராமுலு கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.

You may have missed