கர்நாடகா : அமைச்சர் அளித்த அதிரடி மருத்துவக் குறிப்பு

பெங்களூரு

ர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு அளித்த கொரோனா மருத்துவ குறிப்பு விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும கொரோனாவால் ஊரடங்கு மே மாதம்  3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் கொரோனா தாக்கம் குறையவில்லை.

அதைத் தடுக்க சமுக வலைத் தளங்களில் பலரும் தங்கள் சொந்த கருத்துக்களை மருத்துவ குறிப்பு என்னும் பெயரில் வெளியிடுகின்றனர்.

இவை மக்களைத் திசை திருப்புவதாகப் பல மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு ஒரு அதிரடி மருத்துவ்க் குறிப்பை அறிவித்துள்ளார்.

அவர்,

“ஒரு நாளைக்கு மூன்று முறை பூண்டை உப்பு மற்றும் மஞ்சளுடன் உட்கொள்ளுங்கள்.

சுடு நீரை எடுத்துக் கொள்ளுங்கள்

சீன நாட்டில் இவ்வாறு 3 வேளை பூண்டு மற்றும் சுடுநீர் எடுத்துக் கொண்டு பலர் குணம் அடைந்துள்ளனர்”

எனக் கூறி உள்ளார்.

இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.