கர்நாடக உள்துறை, உணவுத்துறை அமைச்சர்களுக்கு கொரோனா…

பெங்களூரு: கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் உணவுத்துறை அமைச்ச்ர கோபாலையா ஆகியோருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  50 லட்சத்து 20 ஆயிரத்து 360 ஆக உயர்ந்துள்ளது. தற்போது,  சிகிச்சையில் 9 லட்சத்து 95 ஆயிரத்து 933 பேர் உள்ளனர்.  ஒரே நாளில் 1290 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் 39 லட்சத்து 42 ஆயிரத்து 361 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடக உள்படபல மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பொம்மைக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  வீட்டில் வேலை செய்யும் சிறுவனுக்கு நேற்று கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நான் பரிசோதிக் கப்பட்டேன், அதில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன், அறிகுறிகள் எதுவும் இல்லை, ஆரோக்கிய மாகவும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன் என்று கூறி உள்ளார்.

அதுபோல உணவுத்துறை அமைச்சர் கோபாலையாவுக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து, அமைச்சர்களுடன், நேரடி தொடர்பு கொண்டவர்கள் உடனடியாக சோதனை செய்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி