பெங்களூரு

காங்கிரஸ் – மஜத கூட்டணி அரசுக்கு சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர் நாகேஷ் தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தி கடிதம் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் மஜத கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசை கலைக்க பாஜக பெரிதும் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகின. அதை பாஜக மறுத்துள்ளது. கர்நாடக முதல்வர் குமாரசாமி சமீபத்தில் வெளியிட்ட ஆடியோவில் பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா பேரம் பேசிய விவரம் வெளியாகியது.

இது தனது குரல் இல்லை என முதலில் மறுப்பு தெரிவித்த எடியூரப்பா பிறகு அது தமது குரல் எனவும் தாம் பேசியது வெட்டி ஒட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கர்நாடக மக்கள் இடையே இந்த செய்திகள் மிகவும் பரபரப்பை அளித்தன. குமாரசாமி எடியூரப்பாவின் குற்றச்சாட்டை மறுத்து ஆடியோவை தாம் அப்படியே வெளியிட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக கூறப்பட்ட சுயேச்சை சடப்ப்பேரவை உறுப்பினர் நாகேஷ் இன்று காங்கிரஸ் தலைவ்ர் சித்தராமையாவை சந்தித்து கூட்டணி அரசுக்கு தனது ஆதரவு கடிதத்தை அளித்து ஆதரவை உறுதி செய்தார். அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக தலைவர் தினேஷ் ராவ் மற்றும் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.