டில்லி,

ந்தியாவில் அதிகமாக லஞ்சம் வாங்கப்படும் மாநிலங்களில் கர்நாடகா முதல்இடத்தை பெற்றுள்ளது. தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.

இந்த அதிர்ச்சிகரமான தகவலை டில்லியில் செயல்பட்டுவரும் சென்டர் ஆப் மீடியா ஸ்டடிஸ் (சிஎம்எஸ்)  நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவித்து உள்ளது.

தி சென்டர் ஆப் மீடியா ஸ்டடிஸ் நிறுவனத்தின் 11வது ஆண்டு ஆய்வறிக்கை நேற்று வெளியானது.

அதில் இந்தியா முழுவதும் 20 மாநிலங்களில் நடைபெற்ற ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

சிஎம்எஸ் நிறுவனம்  இந்த ஆய்வுக்காக  மாநிலம்தோறும்  மாநகரம் முதல் குக்கிராமங்கள் வரை உள்ள சுமார் 3000  பொதுமக்களிடம் ஆய்வு நடத்தியதாக கூறியுள்ளது.

இந்த ஆய்வு முடிவின்படி கர்நாடகாவில் 77 சதவிகிதம் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், அதைத் தொடர்ந்து ஆந்திராவில் 74 சதவிகிதமும், தமிழ்நாடில் 68 சதவிகிதமும், மகாராஸ்டி ராவில் 57 சதவிகிதமும், காஷ்மீரில் 44 சதவிகிதமும் கரப்ஷன் நடைபெறுவதாக தெரிவித்து உள்ளது.

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளின்படி அரசு சேவைகள் பெற லஞ்சம் பெறுவதில் கர்நாடகா முதல் இடத்தை பிடித்துள்ளது.

அதைத்தொடர்ந்து 2வது இடத்தை ஆந்திராவும், தமிழ்நாடு 3வது இடத்தையும் பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக நாட்டில் உள்ள 20 மாநிலங்களில் Centre for Media Studies என்ற நிறுவனம் பொதுமக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் கர்நாடகா மாநிலத்தில் அரசு பொதுசேவைகள் பெற 77 சதவீதம் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ஆந்திராவில் 74 சதவீதம் லஞ்சம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவை நிதிஆயோக் உறுப்பினர் பிபேக்  டெப்ராஜ் வெளியிட்டார். அப்போது, இந்த ஊழல் குற்றச்சாட்டு தேர்தல் சீர்திருத்தத்துடன் தொடர்புடையது என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய சிஎம்எஸ் நிறுவன தலைவர் பாஸ்கர ராவ், தாங்கள்  பல ஆண்டுகளாக எடுத்து வரும் ஆய்வுகளின் அடிப்படையில் நிதி ஆயோக் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடந்த 2005ம் ஆண்டு லஞ்ச குற்றச்சாட்டில் பீகர் முதலிடத்தில் இருந்தது. ஆனால், தற்போது அந்த மாநிலங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று கூறினார்.

இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.