கர்நாடகா விவகாரம்: ஜனாதிபதி மாளிகை முன்பு யஷ்வந்த் சின்ஹா தர்ணா

டில்லி:

கர்நாடகாவில் எடியூரப்பாவை முதல்வராக கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் பாஜக.வின் அதிருப்தி தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த செயல்பாட்டை எதிர்த்து டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து அவரது டுவிட்டர் பதிவில்,‘‘அரசியலமைப்புக்கு எதிரான வழிகளில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து நான் ஜனாதிபதி மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். ஜனநாயகத்தை பாதுகாக்க என்னுடன் இணையுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.