கர்நாடகா: ஜெயநகர் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பெங்களூரு:

ர்நாடகாவில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் சமயத்தில்,  ஜெயநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்த தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில, அந்த தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் திரண்டு வந்து வாக்களித்து வருகின்றனர். விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி அந்த தொகுதிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்து.

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு, தேர்தல் கடந்த மாதம் 12ம் தேதி 222 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.  நடைபெற்றது. அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்த விஜயகுமார் எம்.எல்.ஏ, கடந்த மாதம் 4ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அதன் காரணமாக அந்த தொகுதியில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற வருகிறது.

இந்த தொகுதியில் மரணம் அடைந்த பா.ஜ.க, வேட்பாளர் விஜயகுமார் தம்பி பிஎன் பிரகலாத் பா.ஜ.க, வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் சவுமியாரெட்டி களமிறங்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக மதசார்பற்ற ஜனதாதளம்  தன்னுடைய வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளது.  இந்த தொகுதியில்  மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இன்று தேர்தல் நடைபெற்று வரும் ஜெயநகர்  தொகுதியில் ஆண் வாக்களர்கள் 1,02,668, பெண் வாக்காளர்கள் 2,03,184 மற்றும் மாற்றினத்தவர்கள் 16 பேர் வாக்களிக்க உள்ளனர்.

ஜெயநகர் தொகுதியில் ஓட்டுப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.   பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஜெயநகர் தொகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இன்று நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் வெளியாகும்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Karnataka Jayanagar constituency polling, கர்நாடகா: ஜெயநகர் தொகுதியில் மஜக வேட்பாளர் வாபஸ்...காங்கிரஸூக்கு ஆதரவு
-=-