பெங்களூரு:

ர்நாடக சட்டமன்றத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது கடந்த 2 நாட்களாக விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில், சபையில் ஏற்பட்ட அமளியை தொடர்ந்து, சபையை வரும் திங்கட்கிழமை (22ந்தேதி)  காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ரமேஷ் அறிவித்துள்ளார்.‘

குமாரசாமி அரசுக்கு எதிராக, காங்கிரஸ், மஜத கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள்  15 பேர் தங்களது ராஜினாமா கடிதங்களை கொடுத்துவிட்டு, பாஜக கட்டுப்பாட்டில் மும்பையில் தங்கி உள்ளனர்.

இதன் காரணமாக குமாரசாமி அரசு பெரும்பான்மை இழந்துள்ளதால், சட்டமன்றத்தில் நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான தீர்மானத்தில் கடந்த 2 நாட்களாக உறுப்பினர்கள் பேசி வரும் நிலையில், 18ந்தேதியே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதுபோல மாநில கவர்னரும், நேற்று காலை 1.30 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், பின்னர் மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஆளுநர் இரண்டாவது முறையாக  அனுப்பிய கடிதத்தை, தனக்கு ஆளுநர் லவ் லெட்டர் எழுதி உள்ளதாக அவையில்  முதல்வர் குமாரசாமி அவைக்குத் தெரிவித்தார்.

இதையடுத்து,  கவர்னர் சட்டப்பேரவைக்கு அனுப்பிய தகவல் ஏற்புடையதா? என்பது பற்றி சட்ட மன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பு  விவாதம் திசை மாறிச்சென்றது. சட்டமன்ற நிகழ்வுகளில், ஆளுநரின் தலையீடு சரியா? என்று காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் விவாதிக்கத் தொடங்கினர்.

பின்னர் முதல்வர் குமாரசாமி தனது உரையை நிறைவு செய்தார். இதைத் தொடர்ந்து, மஜத உறுப்பினர் சிவலிங்கே கெüடா, காங்கிரஸ் உறுப்பினரும் அமைச்சருமான பிரியங்க் கார்கே, நாராயண்ராவ் உள்ளிட்டோர் பேசினர். அப்போது,  அவையை  ஒத்தி வைக்குமாறு காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.

ஆனால், இன்றே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை என்று  பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு சபபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

அவையை ஜூலை 22-க்கு ஒத்திவைக்குமாறு முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் கேட்டுக் கொண்டனர். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, வெள்ளிக்கிழமையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு மீண்டும் வலியுறுத்தினார்.

ஆனாலும் அமளி தொடர்ந்ததால், அவையை திங்கள்கிழமை(ஜூலை 22) காலை 11 மணிக்கு ஒத்திவைத்து பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.

சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுகுறித்து பேசிய சபாநாயகர் ரமேஷ்குமார்,  நம்பிக்கை வாக்கெடுப்பில் காலம் கடத்தவில்லை என்றவர், நான் காலம் தாழ்த்துவதாக சுமத்தும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று  நான் ஒருசார்பாக நடந்து கொள்ள விரும்பவில்லை. காலம் தாழ்த்துவதாகக் கூறுவது எனக்கு வருத்தமளிக்கிறது என்றார்.

தன்மீது சிலர் தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் கூறி வருவதாகவும்,  ஒரு நாள் தாமதப்படுத்தி னால்,  ரூ.12 கோடி பணம் கிடைப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற குற்றச்சாட்டு களை என் மீது சுமத்தினால், அதற்கு தகுந்த பதிலடி தர வேண்டியிருக்கும்.

தான்  இங்கு அமர்ந்து வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளை வழங்குவதற்காக வந்திருக்கிறேன். பொது வாழ்க்கையை நேர்மையுடன் நடத்தி வந்திருக்கிறேன். யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது எளிது. என்னை விமர்சிப்பதற்கு முன்னால் யோசித்துப் பேசுங்கள்.

இவ்வாறு ஆவேசமாக கூறினார்.