கர்நாடக சபாநாயகர் விவகாரம்: உச்சநீதி மன்றத்தில் காரசார விவாதம் தொடக்கம்

கர்நாடக தற்காலிக சபாநாயகர் போபையா

டில்லி:

ர்நாடகா சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக போபையா நியமனம் செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று  இரவு தாக்கல் செய்யப்பட்ட  இடைக்கால மனு இன்று பகல் 11 மணி அளவில் விசாரணைக்கு வந்தது.

இன்று மாலை  நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளதால் பரபரப்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்ளுக்கு ஆளாகி உள்ள சபாநாயகர் போபையா எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதை எதிர்க்கவில்லை, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதைத்தான் எதிர்க்கிறோம் என்று காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல் தெரிவித்தார்.

தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் மரபு மீறப்பட்டுள்ளது என்றும்,போபையா நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது  கபில் சிபல் வாதம் செய்தார்.

இதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த உச்சநீதி மன்றம்,.  தற்காலிக சபாநாயகர் நியமனம் தவறானது எனில், நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிவைக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.