பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு சொந்தமான நிலங்களை ஏலம் விட கர்நாடக மாநில பா.ஜ.க.அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தையே முடக்கி போட்டுள்ளது.
கர்நாடக அரசும் அதற்கு விதி விலக்கு அல்ல.

மதுக்கடைகள் தொடங்கி பல்வேறு இனங்களில் இருந்து வந்து கொண்டிருந்த வருமானம் நின்று விட்டது.

நிவாரணம் உள்ளிட்ட கொரோனா செலவுகள் கை மீறி போய்விட்டன. பொருளாதார நிலையை சரிக்கட்டுவது எப்படி என்பது குறித்து மாநில முதல்-அமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா, சக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஏகப்பட்ட அறிவுரைகள் கூறப்பட்டன.

அதில் ஒன்று-
’’பயன்படுத்தப்படாமல் பெங்களூரு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் மானா வாரியாக நிலங்கள்(காலி மனைகள்) சும்மா கிடக்கின்றன- அவற்றை ஏலத்தில் விற்றால் கணிசமான காசு கிடைக்கும்’’ என்பது. .

,இந்த ’ஐடியா’ எடியூரப்பாவுக்கு பிடித்துப்போனது. உடனடியாக ஓ.கே.சொல்லி விட்டார்.

பெங்களூரு நிலங்கள் மற்றும் பிற இடங்களில் உள்ள நிலங்களை விற்பதன் மூலம் 15 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.