கன மழை “ கர்நாடக அணைகளில் இருந்து 7500 கன அடி நீர் திறப்பு
மைசூரு
கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு மணிக்கு 75000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.
தற்போது கர்நாடகாவில் குடகு மற்றும் வயநாடு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் கபினி மற்றும் கே எஸ் ஆர் அணைகளில் நீர் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் வருகிறது. இதில் கபினி அணைக்கு மட்டும் வினாடிக்கு 42000 கன அடி நீர் வருகிறது.
கபினி அணை முழுவதுமாக நிரம்பி உள்ளது. அதே போல கே எஸ் ஆர் அணையும் முழு கொள்ளளவை எட்ட உள்ளது. இந்த நிலை தொடரலாம் அல்லது மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது தமிழகத்துக்கு கபினி அணையில் இருந்து வினாடிக்கு 45000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் விரைவில் இரு அணைகளிலும் இருந்து மேலும் நீர் திறந்து விடப்படலாம் என தெரிய வந்துள்ளது. கர்நாடக மாநில பொதுப் பணித்துறை அதிகாரிகள் விரைவில் தமிழகத்துக்கு வினாடிக்கு 75000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்