செல்ஃபியா எடுக்கிறே?:  மாணவரை தாக்கிய கர்நாடக அமைச்சர்

 

பெல்காம்:

ன்னுடன் செல்பி எடுக்க முயன்றவறை கர்நாடக அமைச்சர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் சிவக்குமார், பெல்காமில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டார்.  நிகழ்ச்சியில் பேசிய அவர், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அமைச்சரின் பின்னால் இருந்து மாணவர் ஒருவர், பெண்ணுடன் செல்பி எடுக்க முயன்றார்.

இதைப் பார்த்த அமைச்சர் ஆத்திரமாகி அந்த மாணவரை அடித்தார். இதில் மாணவரின் செல்போன், கீழே விழுந்தது.

தற்போது இந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.