பெங்களூரூ

ர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பணிகளில் முதல்வர் எடியூரப்பா தலையிடுவதாக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக அரசில் முதல்வராக எடியூரப்பா பதவியில் உள்ளார்.  அவர் தலைமையில் உள்ள அமைச்சரவையில் ஈஸ்வரப்பா ஊரக வளர்ச்சி துரை, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மற்றும் சிமோகா மாவட்ட பொறுப்பாளராக உள்ளார்.   இவர் இன்று கர்நாடக ஆளுநருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் முதல்வர் எடியூரப்பா தனது துறை விவகாரங்களில் தலையிடுவதால் பணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.  மேலும் முதல்வர் தனது துறை பணிகளில் தேவையற்ற முறையில் அமைச்சரின் அனுமதி இல்லாமல் தவறான நிர்வாகம் செய்வதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முதல்வர் அமைச்சரின் அனுமதி இல்லாமல் தன்னிச்சையாக முடிவு எடுத்து தனக்கு வேண்டிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தனது உறவினர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஈஸ்வரப்பா குறிப்பிட்டுள்ளார்.  இதற்குத் தாம் கடிதம் மூலம் எதிர்ப்பு தெரிவித்த போது அதை மதிக்காமல்  சட்டத்துக்குப் புறம்பாகத் தனது அனுமதி இன்றி பணம் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசியலில் இது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.