ஆடி மாதத்தினால் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளி வைப்பு : சித்தராமையா

டில்லி

ற்போது ஆடி மாதம் என்பதால் கர்நாடக மாநில அமைச்சரவை விரிவாக்கம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ் குண்டு ராவ் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசி உள்ளனர்.  இந்த சந்திப்புக்குப் பிறகு சித்தராமையாவும் தினேஷ் குண்டுராவும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்கள்.

இந்த சந்திப்பில் சித்தராமையா, “வரும் மக்களவை தேர்தலில் மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டி இட உள்ளது.   இதற்கான பேச்சு வார்த்தை இன்னும் நடைபெறவில்லை என்பதால் விரைவில் நடத்தப் பட உள்ளது.   இந்தக் கூட்டணிக்கு கட்சியில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட தயாராக உள்ளனர்.

கர்நாடக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளோம்.   ஆனால் தற்போது ஆடி (கன்னடத்தில் ஆஷாட) மாதம் என்பதால் சற்றே தள்ளி வைக்கப்பட்டுள்ளது.   ஆடி மாதம் முடிந்த பிறகு நிச்சயம் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும்.   அதே போல் ஆடி மாதம் முடிந்த பிறகு வாரியம் மற்றும் கழகங்களுக்கான தலைவர்களும் நியமிக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.